Author Guidelines


ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரமாக நெறிமுறைகள்

  • ஆய்வுக்கட்டுரைகளைச் சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழில் பிரசுரிக்க கட்டுரை சமர்ப்பிக்கும் கட்டணம் உள்ளது. சான்லாக்ஸ் இணையதளத்தில் உங்கள் கட்டுரைகளை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். (www.shanlaxjournals.in).
  • ஆண்டுச்சந்தா செலுத்திட விரும்புகிறவர்கள், மின்னஞ்சல் (email: editorsij@shanlaxjournals.in) அல்லது 9043303383 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விவரங்கள் அறியலாம்.
  • ஆய்வுக்கட்டுரை, பாமினி எழுத்துருவில் இருத்தல் நலம். யூனிக்கோடு எழுத்துருவிலும் அனுப்பலாம்.
  • கட்டுரை, அதிகபட்சம் ஆறு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். A4 தாள் அளவில், கட்டுரையின் வரிகளுக்கிடையில் 1.5 இடைவெளியிடப்பட்டு, எழுத்துரு 12 அளவில் இருத்தல் அவசியம். (MS Office, A4 Size, 1.5 Line Spacing).
  • கட்டுரையாளர்கள் தங்கள் கட்டுரைகளை http://www.shanlaxjournals.in/journals/index.php/tamil/about/submissions இணைப்பில் அனுப்பலாம் அல்லது editorsij@shanlaxjournals.in என்ற மின்னுஞ்சல் மூலம் அனுப்பலாம்.
  • கட்டுரையில் முக்கியமாக ஆய்வுச்சுருக்கம், ஆறு முதன்மைச் சொற்கள், முடிவுரை இருத்தல் அவசியம்.
  • கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கிற மேற்கோள்களுக்கான துணைநூல் பட்டியல் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
  • கட்டுரைகள், அசல் தன்மையுடன் இருத்தல் அவசியம். வேறு கட்டுரைகளில் இருந்து எடுக்கப்படாததாகவும், கருத்து ஒற்றுமை (Plagiarism)) இன்றியும் இருக்க வேண்டும்.
  • கட்டுரைகள் தட்டச்சுப் பிழை, இலக்கணப் பிழை இன்றி அமைதல் வேண்டும். முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கட்டுரையை அனுப்புவதற்கு முன்பாகத் தங்கள் நெறியாளரிடம் காட்டி ஒப்புதல்பெற்று அனுப்பிட வேண்டுகிறோம்.
  • கட்டுரைக்குப் பொருத்தமானதும், வலு சேர்க்கக்கூடியதுமான படங்களையும், வரை படங்களையும் சேர்த்து அனுப்பினால், ஏற்புடையவற்றைப் பிரசுரிக்க முடியும். அவை வாசிப்பாளர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.
  • தமிழாய்வில் ஈடுபட்டுள்ள கல்விப்புலம் சார்ந்தவர்களும், தமிழுடன் தொடர்புடைய பிற துறையினரும், தமிழாய்வில் ஈடுபட்டுள்ளவர்களும் கட்டுரைகள் அனுப்பலாம்.
  • கட்டுரைகள் வேறு எந்தவொரு ஆய்விதழிலோ, பத்திரிக்கையிலோ ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டதாக இருத்தல் கூடாது.
  • ஒரே கட்டுரையை வெவ்வேறு இதழ்களுக்கு அனுப்ப வேண்டாம்.
  • தமிழாய்வுத் துறை தொடர்பான கட்டுரைகளை ஆங்கிலத்திலும் அனுப்பலாம். தமிழ்த் துறை அல்லாத பிற துறை கட்டுரைகள் ஏற்கப்படாது.
  • சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை பிரசுரமாகும். கட்டுரைகள் முதன்மை ஆசிரியரின் மதிப்பீடு, ஒப்புதல் பெற்ற பின்னர் வெளியிடப்படும். முதன்மை ஆசிரியரின் முடிவே இறுதியானது.
  • பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளுக்கான ஒப்புதல் கடிதம், மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும்.
  • கட்டுரைகள் வெளியிடும் முன்பு பதிப்புரிமை உறுதிமொழிப் படிவத்தில் கையொப்பம் பெறப்படும்.
  • கட்டுரையாளர்கள் தங்கள் பெயர், பணிநிலை விபரங்கள், கைபேசி எண், மின்னஞ்சல், முகவரி ஆகியவற்றைக் கட்டுரையின் முதல் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடவும்.

கட்டுரை சமர்ப்பிக்கும் கட்டணம் விவரங்கள்

இந்திய ஆசிரியர்கள் - 2000 INR
வெளிநாட்டு ஆசிரியர்கள் - 50 USD