பொய்யா மொழியில் மழைநீர்ச் சுழற்சி
Abstract
நீரின்றமையாதுலகு’ என்ற தொடரானது நீர் இல்லாமல் உலக மக்களது வாழ்க்கை மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களின் வாழ்க்கையும் இயங்காது என்ற பொருளைத் தருகின்றது. இது ஏற்புடையது எனினும் வள்ளுவரின் இத்தொடர் அறிவியல் நோக்கில் ஆழ்ந்த நோக்கங்களுக்கு வழிகோலுகின்றது. பொய்க்காது பெய்யும் மழையால் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கையானது தொடர்கின்றது. ஆனால் மழை பெய்யாவிடில் கடலும் வற்றும், மழை இல்லையேல் பசும்புல்லான ஓரறிவுயிர் கூட இல்லாமல் அழிந்து போகும். மழை பொய்த்தால் உழவர் ஏர்ப் பிடித்து உழவுத் தொழில் புரியமாட்டார். உலக உயிர்களைப் பசி வருத்தும். வாழ்வைக் கெடுப்பதும் வாழ்வில் வளம் கெட்டு நொந்தவரைக் காப்பதும் மழை. மழை பொய்ப்பின் தானம் தவமிரண்டும் தவறிப் போகும். இதுமட்டுமல்லாமல் ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் திருவிழாவும் நடைபெறாது போகும். இவை போன்று நீரினால் அடையும் நன்மைகளையும் அவலங்களையும் வான்சிறப்பு என்ற அதிகாரத்தின் வழியாகப் பொய்யில் புலவரான திருவள்ளுவர் மக்கள் மனத்தில் பதிய வைத்துள்ளார்.
PDF Downloads: 0 times
Copyright (c) 2026 பா இரம்ஜான், சி அருள் மைக்கேல் செல்வி

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.

