குறள் சுட்டும் நன்னெறிகளும் இக்காலச் சட்ட நெறிகளும்
Abstract
திருக்குறள் வழங்கும் அறநெறிகள், நீதித்துறையின் செயல்பாட்டில் முக்கியமான வழிகாட்டுதல்களாக விளங்குகின்றன. “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி” (Kural 118) நீதித்துறையில் நடுநிலைத்தன்மையை வலியுறுத்துகிறது. “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு” (Kural 129) சொற்பயன்பாட்டின் ஒழுக்கநெறியை எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய குறட்பாக்கள் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளன (S. Palani v. Bajaj Textiles, 1999). மேலும், உயிர் பாதுகாப்பு, சமூக நீதி, சுற்றுச்சூழல், தண்டனை அளவுரு போன்ற பல துறைகளில் திருக்குறள் மற்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இடையிலான ஒத்திசைவு இவ்வாய்வில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.
PDF Downloads: 0 times
Copyright (c) 2026 ப மோகன்தாசு

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.

