திருக்குறளில் அகமரபுச் சிந்தனைகள் வெளிப்படும் விதம்
Abstract
இக்கட்டுரை திருக்குறளின் காமத்துப்பாலில் வெளிப்படும் அகமரபுச் சிந்தனைகளை சங்க இலக்கிய அகத்திணை மரபுடன் இணைத்து ஆய்வு செய்கிறது. கூடல், பிரிதல், பொறுத்திருத்தல், வருந்தல் மற்றும் ஊடல் ஆகிய அக இலக்கிய அடிப்படை கூறுகள் திருக்குறளில் எவ்வாறு அமைப்பாக வெளிப்படுகின்றன என்பது இவ்வாய்வின் மையப்பொருளாகும். திருவள்ளுவர் சங்க இலக்கிய மரபை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அதனை அறநெறி மற்றும் மனிதநேய உளவியல் பார்வையில் மறுவடிவமைத்துள்ளார் என்பது இவ்வாய்வின் கருதுகோள். மேலும், காமத்துப்பாலில் வெளிப்படும் பெண்ணின் உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் சமூக ஒழுக்கம் நவீன உளவியல் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு விளக்கப்படுகிறது. இதன் மூலம் திருக்குறள் மனித உறவுகளின் உளவியல் மற்றும் சமூக அமைப்பை ஒருங்கிணைக்கும் தத்துவ நூலாக விளங்குகிறது என்பது உறுதியாகிறது.
PDF Downloads: 0 times
Copyright (c) 2026 ஜெ மெர்சி கிரேஸ்

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.

