திருக்குறளும் அறிவியலும்

  • இரா சுகுணாதேவி முனைவர் பட்ட ஆய்வாளர் (ப), தமிழ் முதுகலை மற்றும் உயராய்வுத்துறை, ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, மதுரை
Keywords: திருவள்ளுவரின் அறிவியல் பார்வை, குறளில் இயற்பியல், வேதியியல், உயிரியல், வேளாணியல், மருத்துவஇயல், வானியல், கணிதவியல், உலோகவியல், எந்திரவியல் மற்றும் பொறியியல்சார் அறிவியல்

Abstract

சங்ககால இலக்கியங்களான பதினெண் மேற்கணக்கு நூல்கள், சங்கம் மருவியகால இலக்கியங்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகிய அனைத்தும் மனித வாழ்வின் நுட்பங்கள் நிறைந்த வாழ்வியல் நூல்களாகும். அவற்றில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திருக்குறளில், அறக்கருத்துகளுடன் அறிவியல் சார்ந்த உண்மைகள் எண்ணற்ற அளவில் பொதிந்துகிடக்கின்றன. அன்றைய காலகட்டத்திலேயே மக்கள் எதையும் பகுத்தறிந்து சிந்தித்துநோக்கும் அறிவியல் மனப்பான்மையுடன் வாழ்ந்துவந்ததை, பல குறள்கள் உணர்த்துகின்றன. “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்" என்று ஔவையும், "கடுகைப் பிளந்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தெறித்த குறள்" என்று இடைக்காடனாரும் “திருவள்ளுவ மாலை”யில் புகழ்ந்ததற்கொப்ப, அணுவின் நுண்ணிய ஆற்றலைப்பற்றி வள்ளுவர் கூறியுள்ள கருத்துகள் வியக்க வைக்கின்றன. திருக்குறளின் கருத்துகள், இக்கால, புதிய கோள்களைக் கண்டுபிடிக்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கும், ஆழ்கடல்சார் ஆராய்ச்சிக்கும், நீர், நில வாழ் பல்லுயிர் ஓம்புதலுக்கும், உலக தட்பவெப்ப நிலையைப் பராமரிப்பதற்கும், நிலையான நீர்வளத்திற்கும், எதிர்கால நில வளத்திற்கும், மனித சமுதாயத்துக்கும் பெருமளவில் ஒத்துவந்து, அவை யாவும் இக்கால ஆய்வுக்கும் பொருந்திவருகின்றன என்பதை இவ்வுரை விளக்குகிறது. இன்று உலகம் முழுவதும் அறிவியல் முன்னேற்றம் பல்வேறு படிநிலைகளில் வளர்ந்திருந்தாலும் அரிய அறிவியல் கருத்துகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் எனும் செவ்வியல் நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன என்பதையும் அறியலாம்.

Published
2026-03-20
Statistics
Views: 0 times
PDF Downloads: 0 times