புத்தரின் போதனைகளும் திருக்குறளும்

  • த சாக்கியசக்தி உதவிப் பேராசிரியர், குருநானக் கல்லூரி சென்னை, தமிழ்நாடு, இந்தியா

Abstract

இந்த ஆய்வுக் கட்டுரை திருக்குறளின் தத்துவ அடித்தளம் மற்றும் பௌத்தச் சிந்தனைகளுடன் அதன் தொடர்பை விமர்சனப் பார்வையில் ஆராய்கிறது. பண்டிதர் அயோத்திதாசரின் “திரிக்குறள்” எனும் மறுவாசிப்பு அடிப்படையில், திருக்குறள் புத்தரின் சுத்தபிடகம், ஞானபிடகம் மற்றும் அபிதம்மபிடகம் ஆகிய பௌத்த நூல்களின் தத்துவச் செல்வாக்கில் உருவானதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர் . மேலும், திருவள்ளுவரின் பிறப்பு, குலம் மற்றும் காலம் தொடர்பான மரபுக் கதைகள் சமூக-வரலாற்று கட்டமைப்புகளின் விளைவாக உருவானவை எனும் கருத்தும் எடுத்துரைக்கப்படுகிறது. உரை விமர்சன அணுகுமுறையின் மூலம் திருக்குறளின் அதிகாரங்கள் பௌத்த நெறிமுறைச் சிந்தனைகளான கருணை, அறம், பற்றின்மை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றுடன் ஒப்பிடப்படுகின்றன. இதன் மூலம், திருக்குறள் பல்துறை தத்துவச் செல்வாக்குகளின் கலவையாகவும், பொதுமைமிக்க நெறிமுறை இலக்கியமாகவும் விளங்குகிறது என்பது இந்த ஆய்வின் முடிவாகும். மேலும், வள்ளுவரின் வரலாற்று அடையாளம் குறித்து மேலதிக ஆய்வுகள் அவசியம் என்பதும் வலியுறுத்தப்படுகிறது

Published
2026-03-20
Statistics
Views: 0 times
PDF Downloads: 0 times