திருக்குறளும் கண்களும்
Abstract
அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பெரும் பிரிவுகளுக்குள் உலக வாழ்வியலை தத்துவார்த்தமாக எடுத்துரைத்த வள்ளுவருக்கு நிகர் அவரே என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. மனித வாழ்வின் மிக முக்கியமான கூறாகக் கருதப்படும் காதல் உணர்வுகளை அவர் கண்களின் வாயிலாக அழகியலோடு வெளிப்படுத்தியுள்ளார். உலகம் தோன்றியதிலிருந்து இன்றளவும் அதன் நிலைத்தன்மைக்கு அடிப்படையாக இருப்பது உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியும் அன்புணர்வும் ஆகும். நவீன உலகில் ஆதிமனிதன் பல தொழில்நுட்ப அதிசயங்களை வியப்புடன் காணினும், மனிதர்களிடையே வெளிப்படும் அன்பு உணர்வை இயல்பானதாகவே ஏற்றுக்கொள்வான். இது உயிரியல் பரிணாமத்தில் அன்பு ஒரு அடிப்படை இயற்கை உணர்வாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. வள்ளுவர் “மலரினும் மெல்லிது காமம்” எனக் கூறுவதன் மூலம் காதலின் நுட்பத்தையும் மென்மையையும் அழகியலோடு விளக்குகிறார். இத்தகைய நுட்பமான உணர்வுகளை சமூகத்திற்கு சரியான முறையில் எடுத்துரைத்தால், வன்முறை, பாலியல் வன்முறை போன்ற சமூகச் சீர்கேடுகள் குறைக்கப்படலாம். சமூகத்தில் காணப்படும் ஆதிக்க மனப்பான்மை, பெண்ணடிமை, பாலியல் சுதந்திரமின்மை, பாலியல் கல்வியின்மை, ஊடகங்களில் பெண்களின் தவறான சித்தரிப்பு போன்றவை பல்வேறு சமூகச் சீர்கேடுகளுக்குக் காரணமாகின்றன. இவற்றை நீக்குவதற்கான சிந்தனைகள் வள்ளுவரின் காலத்திலேயே காணப்படுகின்றன. இந்தப் பின்னணியில், வள்ளுவனின் அழகியல் சிந்தனைகள் கண்களின் வழியாக எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.
PDF Downloads: 0 times
Copyright (c) 2026 இரா வீரமணி

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.

