திருக்குறளும் உளவியலும்

  • சு கோபாலகிருஷ்ணன் முதுகலைத் தமிழாசிரியர், அரசினர் மேல்நிலைப்பள்ளி, கருவாக்குறிச்சி, மன்னார்குடி தாலுகா, திருவாரூர் மாவட்டம்
Keywords: குற்றமற்ற மனமே சிறந்த அறம், எண்ணமே ஏற்றம் தரும், தன்னம்பிக்கை மற்றும் சுயகட்டுப்பாடு, இனியவைகூறல்

Abstract

செம்மொழியான தமிழ்மொழியில் 1330 குறட்பாக்களை உடைய திருக்குறளை  இயற்றிய திருவள்ளுவரை உலகின் முதல் மனநல மருத்துவர் என்று கூறினால் மிகையில்லை. திருக்குறளில் உழவியல், உளவியல், இயற்பியல், மருத்துவவியல், பொருளியல், வணிகவியல், நுண்ணியல், அளவையியல், நீரியல், தாவரவியல், விலங்கியல், மனையியல், நட்பியல், அழகியல், அன்பியல், உறவியல், காதலியல்,   போன்ற பல துறைகள் பற்றியும் மிகவும் அழகாக எடுத்துரைப்பதால் தான் உலகம் போற்றும் உயரிய நூலாகத் திருக்குறள்  விளங்குகிறது. உலகிற்கே வழிகாட்டும் வாழ்க்கை நெறி நூலான திருக்குறள் 40க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மற்றும் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, 100க்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளிவந்துள்ளது. திருக்குறளில் ஒவ்வொரு குறட்பாவும் ஏழு சீர்களுடன் ஒன்றரை அடியில் உலக மக்கள் அனைவரும் ஏற்று தங்கள் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் உயரிய கருத்துகளைத் திருவள்ளுவர் படைத்துள்ளார்.  மனித சமுதாயத்திற்கு நாகரிகத்தையும், பண்பாட்டையும் படைத்துத் தருவது மனம் மட்டுமே. பழங்காலந் தொட்டு அறிஞர்கள் மனதின் அமைப்பையும், செயல்பாட்டையும் விளக்கி வருகின்றனர். அந்த வகையில் உலகப் பொதுமறையாம் திருக்குறள் வாழ்வியலுக்கான விரிவான உளவியல் களஞ்சியம் ஆகும். திருக்குறளின் ஒவ்வொரு குறட்பாவும் நமது மனத்தின் ஆழத்தில் ஒளியேற்றி, மன அமைதியையும், திட்டத்தையும் வளர்த்து, நிறைவான வாழ்வை வாழ உதவுகிறது. மனித வாழ்க்கையானது எண்ணம், சொல், செயல் ஆகிய மூவகைப் பொதுநிலைகளில் அமைகிறது. ஆகவே உள்ளத்தில் நல்ல எண்ணங்களை விதையாக விதைத்தால் நல்ல சொற்களும், செயல்களும் மரமாக வளர்ந்து சமூகம் மேம்பட திருக்குறள் வழிகாட்டுகிறது.

Published
2026-03-20
Statistics
Views: 0 times
PDF Downloads: 0 times