முழுமை நலவாழ்விற்கு மகரிஷியின் உணவு முறையும் எளிமை முறை உடற்பயிற்சியும்
Abstract
மனித குலம் மகிழ்ச்சி நிறைந்த ஆரோக்கியமான வாழ்வையே விரும்புகின்றது. ஆனால்; தினசரி காலையில் எழுந்தது முதல் இரவு வரை ஒவ்வொரு விஷயத்திற்கும் பல பிரச்சனைகள் உடல்; மற்றும் மனதளவில் மனதில் வேகமாய் ஓடி துரத்துகின்றன. துன்பத்தை நீக்கி இன்பமாக வாழ எண்ணும்பொழுது ஏதேனும் ஒரு வழி தேவைப்படுகிறது. ஓய்வில்லாமல் வேலை செய்யும் பொழுது கைகள் வலி எடுக்கின்றது. கைகள் வலிக்கும் போது அதன் முக்கியத்துவமும், அதன் மேல் கவனமும் ஏற்படுகின்றது. மனித உடலின் ஒவ்வொரு உறுப்பின் முக்கியத்துவம் அறிந்து உடலை பேணிக்காத்தல் அவசியமாகும்.
உடலுக்கு கேடு விளைவிக்கும்; உணவு பழக்கங்களில் மனித இனம் சிறைபட்டுள்ளது. உணவு உண்பது போல் மாறிப்போன மருந்து மாத்திரைகளின் எண்ணிக்கையில் வாழ்நாளின் எண்ணிக்கை சுருங்கியுள்ளது. உணவு உண்பதன் மூலம் உடல் வளர்ச்சியடைகின்றது. நாள்தோறும் உடல் உறுப்புகளை ஒரு சில நிமிடங்களாவது ஒதுக்கி கவனிக்க பழக வேண்டும்.
உலகத்தின் பேரமைதிக்காகவும், அனதை;து மானுட உயிர்களின் ஒற்றுமைக்காகவும் இயற்கை பேராற்றலின் தகவமைப்பிற்காகவும் தன் உடலையே ஆராய்ச்சிக் கூடமாக மாற்றி எளிமையின் எல்லை தொட்டு 8 வயது முதல் 80 வயது வரை அனைவரும் மிக சுலபமாக செய்யும் வகையில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி உருவாக்கிய எளிய முறை உடற்பயிற்சி நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாமாகும்.
மகரிஷி அருளிய எளியமுறை உடற்பயிற்சியினால் உடலில் இரத்த ஒட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம் சீராகி உடல் நலம் பெறுகிறது. வேதாத்திரி மகிரிஷி அவர்கள் உணவு குறித்தும், உணவு உண்ணும் முறை குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார்.
This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.