பக்தி இலக்கியங்களில் இயற்கை இதழின் சுவை தமிழில், தமிழின் சுவை இதழில்
Abstract
இயற்கை என்றால் என்ன? பிறிதொன்றால் உருவாக்கப்படாது, தனது இயல்பில் மாறாது இருப்பது எதுவோ, அதுவே இயற்கையாகும். இயற்கை எதும் சக்தியை ‘ஏது’ என்றும் கூறுவர். ஒன்றன் தோற்றத்திற்கும் இயற்கை மூலக்காரணமாக இருப்பதாக அதன் சக்தி ஏது எனச் சுட்டப்படும். இயற்கையின் தொழிற்பாடுகள் வட்டமாகச் சுழன்று கொண்டிருக்கும். எனவே அது அழிவில்லாதது. அதன் ஒரு சக்தியை இன்னொரு சக்தியாக மாற்ற முடியுமே அல்லாமல் ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆதலால் பொதி கவிஞ்ஞானம் இயற்கையின் சக்தி அழிவில்லை என்கிறது.
இயற்கையின் சக்தியே உலகை இயக்குகிறது. அது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐம்பூதங்களால் ஆனது. இடைச்சங்ககாலத்தில் வாழ்ந்த தொல்காப்பியர்,
“நிலம் தீ நீர் வளி விசும்போடு
ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் அதலின்”
என இந்த உலகம் ஐம்பூதங்களின் கலவை என்கிறார்.
புறநானூறும்,
“மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பும் தைவரு வளியும்
வளித் தலைஇ தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை”
ஏன ஐம்பூதத்து இயற்கையைத் தெளிவுபடுத்துகிறது.
PDF Downloads: 41 times
Copyright (c) 2025 இரா ஹரிணிகாஸ்ரீ, அ. பாக்கியமுத்து

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.

