சங்க கால மக்களின் சமுதாய நிலைகள்
Abstract
தமிழர்களின் வாழ்வு, தமிழர் பேசிய மொழி, தமிழர் வாழ்ந்த நிலம் ஆகிய இம்மூன்றுக்கும் இயல்பான நெருங்கிய தொடர்பு உண்டு என்ற உண்மை தமிழரின் நாகரிகத்தின் அடிப்படைத் தத்துவமாக அமைந்துள்ளது. சங்ககாலச் சமுதாய நிலத்தின் இயற்கை அமைப்புகளின் அடிப்படையில் ஐந்து வகையாகப் பாகுபாடு செய்யப்பட்டிருந்தது. சங்ககாலச் சமூக அமைப்பு அறிவர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய முக்கியப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஊரின் சில பகுதிகள் சேரிகள் என்று அழைக்கப்பட்டன. சங்ககாலத் தமிழர் இல்லற வாழ்க்கையைப் பெரிதும் பாராட்டி வந்தனர். சங்ககால மகளிர் கடமை ஈடுபாட்டுடனும், தாராள மனப்பான்மையுடன், கற்பில் சிறந்தவர்களாகவும் இருந்தார்கள். கல்வி கற்கவும், பொருளீட்டவும் மன்னனுக்காக தூது செல்லவும் கணவன் பிரியும்போது மனைவி அவனுடன் செல்லும் பழக்கமும் இல்லை. சங்ககால சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு இருந்தாலும் நடைமுறையில் பரத்தையருடன் உறவு கொள்ளும் பழக்கம் இருந்து வந்தது.
PDF Downloads: 51 times
Copyright (c) 2025 சு செல்லம்மாள், அ பாக்கியமுத்து

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.

