கற்றல் கற்பித்தலில் தமிழ் முப்பரிமாணச் செயலிகள்
Abstract
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புக் கணிப்பொறி எனலாம். இந்த தொழில் நுட்பத்தின் தொடர்ச்சியே திறன்பேசி (Mobile Phone) எனலாம். மனித வாழ்விலும் கல்வி முறைகளிலும் இக்கருவிகள் முக்கிய இடம் பெறுகின்றன. தமிழ்மொழி இணைய வழியில் பல்வேறு வகைகளில் பயன்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் எங்கிருந்தும், எந்நேரமும் படிக்கும் அளவிற்குத் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. இணைய வழிக்கற்றல் முறைகளுள் செயலிவழிக் கற்றல் குறிப்பிடத்தக்கது. செயலி வழிக்கற்றல் முறைகளுள் இருபரிமாண மற்றும் முப்பரிமாணச் செயலிகளும் அடங்கும். செயலிகளின் பயன்பாடுகளை ஆய்வு செய்யும் நோக்கில் வினா நிரல், வினாப் பட்டியல் வழிக்கருத்துக் கணிப்புச் செய்யும் வகையில் இந்த ஆய்வு அமைகிறது.
PDF Downloads: 36 times
Copyright (c) 2025 இரா இந்து

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.

