எட்டுத்தொகையில் விலங்கினங்கள் - பண்டமாற்றும் பாதீடும்
Abstract
சங்க இலக்கியங்களில் பண்டமாற்று குறித்து மிகுதியானச் செய்திகள் பதிவாகியுள்ளன. எல்லா திணை மக்களும் தமக்குத் தேவையான உணவுகள் அனைத்தையும் தத்தம் நிலங்களிலேயே உற்பத்தி செய்ய முடியவில்லை. தம் நிலங்களில் உற்பத்தி செ#த பொருட்களைக் கொடுத்து பிற நிலங்களில் உற்பத்தி செய்த பொருட்களைப் பண்டமாற்றாகப் பெற்றுக் கொண்டனர்.
தம் நிலத்தில் பயிர் செய்யும் பொருட்களைத் தவிர வேறு எதனையும் அவர்களால் உற்பத்தி செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. ஆதலால் தான் பண்டமாற்று உருவானது. பல்வேறு பொருட்களைப் பண்டமாற்றாக கொடுத்து வாங்கியதாக சங்க இலக்கியங்கள் கூறினாலும் அவற்றுள் விலங்குகள் எவ்வாறு பண்டமாற்றில் இடம் பெற்றிருந்தன என்பதைக் கீழ் காணும் குறிப்புகள் வழி அறியலாம்
PDF Downloads: 3 times
Copyright (c) 2025 ஆ புஷ்பா சாந்தி

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.

