சங்க அகப்பாடல்களில் குறிகளில் தோழியின் செயல்பாடுகள்

  • இரா விஜயா உதவிப் பேராசிரியர், தூய சவேரியர் கல்லூரி, பாளையங்கோட்டை

Abstract

இன்று செவ்வியல் இலக்கியமாக செம்மொழி இலக்கியமாக போற்றப்பெரும் சங்ககால இலக்கியங்கள் ஈராயிரத்துக்கு முந்தைய மக்களின் வாழ்வியல் வரலாற்றை இம்பும் வரலாற்று ஆவணங்களாக கருதப்பட்டு வருகிறது. இவற்றில்
எட்டுத்தொகை அகநூல்களில் ஒன்றான அகநானூறு பண்டைய தமிழரின் காதல், வரலாற்று பதிவுகள், பண்பாட்டு கூறுகளை எடுத்து இயம்பும் நூலாகும். அவ்வாறான் அகநூழ்களில் பெருஞ்செல்வாக்கு கொண்டவர்கள் மகளிர்தாம்.
அக மாந்தர்களின் தலைவனும், தலைவியும் காதலுணர்வு வயப்பட்டுத் தடுமாறும் தன்மையர் செவிலியும் நற்றாகும் குடும்ப மதிப்புணர்வுக்கு கட்டுப்பட்டவர். தோழி ஒருத்தியே எந்த உணர்வுக்கும் சிறைப்படாமல் அறிவு நிலையிலேயே
தானும் இயங்கித் தன்னைச் சார்ந்தவரையும் இயக்குகிறது. களவு வாழ்க்கையில் தலைவியையும், தலைவனையும் தனக்காக குறியிடம் அமைத்து அதில் இன்புறச் செய்கிறாள். அவ்வாறு அமைக்கும் குறியிடத்தில் தோழியின் செயல்பாடுகள்
மற்றும் நெறிமுறைகள் வெளிப்படும் திறம் இக்கட்டுரையில் காணப்படுகிறது. 

Published
2025-03-21