Is ‘Silapathikaram’ An Epic of Justice?
சிலப்பதிகாரம் நீதிக் காப்பியமா?
Abstract
இந்த ஆய்வு, சிலப்பதிகாரம் எனும் ஐம்பெரும் காப்பியத்தில் ஒன்றான காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வின் முக்கிய நோக்கமானது, சிலப்பதிகாரக் காப்பியம் நீதிக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதாகும். இவ்வாய்வு, பண்புசார் அணுகுமுறையில் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வுக்கான தரவுகள் யாவும் நூலக ஆய்வு அணுகுமுறையில் கையாளப்பட்டுள்ளது. இவ்வகை, நூலக ஆய்விற்கு ஏற்புடைய நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் பயன்படுத்தி விளக்கவியல் அணுகுமுறையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கிடைக்கப்பெறும் தகவல்கள் அனைத்தும், ஆய்வின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராயப்பட்டுள்ளன. ஆராயப்பட்ட, தரவுகளை ஆய்வு நோக்கதிற்கு ஏற்ப வகைப்படுத்தி, பத்தி (Text analysis) முறையில் பகுத்தாயப்பட்டுள்ளன. இந்த ஆய்வில், ஆறு நீதிக் கருத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் வாயிலாகச் சிலப்பதிகாரம் ஒரு நீதிக் காப்பியம் என்று சான்றுகளின் வழி உறுதி செய்ய முடிந்துள்ளது.
Copyright (c) 2025 Navin G Ganeson, Manonmani Devi Annamalai

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.