சிலப்பதிகாரத்தில் நிறைமொழியும் - மறைமொழியும்
Abstract
தமிழ்ச் செவ்விலக்கியங்களைப் படைத்த புலவர்கள் அனைவரும் நிறைமொழியாளர்கள். இவர்கள் சொன்னவை சொன்னபடி நடக்கச் செய்யும் திறனுடையவர்கள். நாவன்மைமிக்கவர்கள். புறயிலக்கியங்களில் தனியொரு புலவர் தானும் தன்னைச் சேர்ந்தவர்களும் நன்மை பெற வேண்டும் என்பதற்காகப் பாப்புணர்ந்து பாடியிருக்கிறார்கள். தான் பாடியதன் நோக்கம் நிறைவேறாதபோதும், தன்னை இகழ்ந்த போதும் கோபமுற்று மறைமொழியாக (பிறர் அறியாமல் மறைத்துச் சொல்லு; சொல்) வாழ்த்தியும் சபித்தும் பாடியிருக்கிறார் புலவர். இதற்கானச் சான்றுப் பாடல்கள் சங்கயிலக்கியங்களில் உள்ளன. இவர்கள் வழிவந்தோர்களில் இளங்கோவடிகளும் ஒருவர். தான் படைத்த காப்பியத்தில் மங்கலமாக தொடங்கி மங்கல வாழ்த்து பாடலை நிறைமொழியில் பாடியிருக்கிறார். மங்கலமாய்ப் பாடும்போதே மறைமொழியையும் பிறர் அறியாமல் கூறிச் செல்கிறார். இக்கட்டுரை நிறைமொழியும் மறைமொழியும் பயின்று வரக்கூடிய பூகர் காண்டத்தில் மங்கல வாழ்த்துப் பாடல் பற்றி விளக்குகிறது.
PDF Downloads: 0 times
Copyright (c) 2026 சி. விமலா, சி. அமுதா

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.

